News September 17, 2025

தருமபுரி : இன்று இரவு ரோந்து அலுவல் விவரங்கள்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (16.09.2025) இரவு ரோந்து அலுவல் விவரங்கள் வெளியிடப்பட்டன. மாவட்ட இரவு ரோந்து அலுவலராக பாலக்கோடு சப்-டிவிஷன் காவல் துணை கண்காணிப்பாளர்கே.மு. மனோஹரன் நியமிக்கப்பட்டுள்ளார். தாலுக்காவாரியாக பொறுப்பேற்கும் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் அவர்களின் மொபைல் எண்கள் பொதுமக்கள் வசதிக்காக அறிவிக்கப்பட்டுள்ளன. அவசரநிலையில் மக்கள் நேரடியாக தொடர்புகொள்ளலாம்

Similar News

News September 17, 2025

தர்மபுரி: அரசு வாகனம் ஏலம்

image

தருமபுரி TN07G0240 பயன்பாட்டில் இருந்த ஈப்பு வாகனம் ரூ.22,000/- ற்கு ஏலம் விட ஆரம்ப தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி கழிவு செய்யப்பட்ட 01 ஈப்பு வாகனத்தினை 9ம் தேதி அன்று முற்பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்படவுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியை தெரிவித்துக்கொள்ள கோரலாம் ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

News September 16, 2025

நலத்திட்டங்களை வழங்கிய கலெக்டர்

image

தருமபுரி நகராட்சி, பிபிசி திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளின் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் வழங்கினார். உடன் அரசுத் துறை அலுவலர்கள் இருந்தனர்.

News September 16, 2025

தர்மபுரியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டத்தில்
தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 3,500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில்
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஷ், தர்மபுரி எம்பி. மணி அடையாள அட்டைகளை இன்று வழங்கினர்.

error: Content is protected !!