News April 12, 2024

தமிழக அரசு, சிஏஜி இடையே மோதல் (2)

image

ஆடிட்டர் ஜெனரல் ஜெய்சங்கரை அவரது பணிக்கே திருப்பி அனுப்பி உத்தரவிட்டது குறித்த கேள்விக்கு, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியபோது, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023 விதிகளுக்கு எதிராக ஜெய்சங்கர் சில உத்தரவுகளை பிறப்பித்ததாகவும், அதனாலேயே ஜெய்சங்கரை திருப்பி அனுப்பி உத்தரவிட்டதாகவும் உதயசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News July 4, 2025

அஜித் மரண வழக்கு: நீதிபதி தீவிர விசாரணை

image

அஜித் மரண வழக்கில் மதுரை நீதிபதி 3 நாட்களில் 17 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அஜித்தின் தாயார், உறவினர்கள், போலீஸார், கோயில் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர், அறநிலையத்துறை அதிகாரி உள்ளிட்ட பலரிடம் நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். சம்பவத்தை அறிந்தவர் நேரில் சாட்சியளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 4, 2025

கோபத்தில் காதலி செய்த காரியம்… கொடூரம்!

image

உ.பி.யில் காதலி அழைத்ததன் பேரில் விகாஷ் என்பவர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரும் இரவு முழுவதும் தனிமையில் இருந்துள்ளனர். காலை இருவருக்குமிடையே மோதல் ஏற்பட, ஆத்திரத்தில் அந்த பெண் பிளேடால் அவரின் ஆண் உறுப்பை கிழித்துள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட விகாஷ் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்படவில்லை. ஆனால் விகாஷின் தாயார் மூலம் தகவல் வெளியே வந்துள்ளது.

News July 4, 2025

ஆப்பிரிக்க கால்பந்து ஜாம்பவான் காலமானார்

image

ஆப்பிரிக்க கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான பீட்டர் ரூஃபாய் (61) உடல்நலக் குறைவால் காலமானார். உலகின் சிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாக நைஜீரியா அணியை உருவாக்கிய இவர், அதன் கேப்டனாகவும், சிறந்த கோல் கீப்பராகவும் செயல்பட்டார். 17 ஆண்டுகள் நாட்டுக்காக விளையாடிய இவர், ஆப்பிரிக்க கோப்பையை நைஜீரியா வெல்ல காரணமாக இருந்தார். இவர் தலைமையில் தான், அந்த அணி முதன் முதலாக உலகக் கோப்பைக்கும் தகுதி பெற்றது.

error: Content is protected !!