News September 16, 2025

சேலம் தட்டு வடை செட்டை விரும்பி சாப்பிட்ட உதயநிதி!

image

கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, பெண்கள் தயாரித்த சேலத்தின் புகழ்பெற்ற தட்டு வடை செட்டை ஆர்வத்துடன் ருசி பார்த்தார். மேலும், மூலிகை தேநீரையும் பருகினார்.

Similar News

News September 17, 2025

சேலம் வழியாக நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

image

தீபாவளி, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்களை (06054/06053) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வரும் செப்.30 முதல் அக்.29 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திண்டுக்கல், கரூர், நாமக்கல், சாத்தூர், மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் மட்டும் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

News September 17, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இன்று (16.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 16, 2025

சேலம்: நாளை முகாம்கள் நடைபெறும் இடங்கள்!

image

சேலம் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 17) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள ▶️புத்தூர் அக்ரஹாரம் வள்ளலார் மண்டபம் சின்ன புத்தூர் ▶️ இடங்கள சாலை இடங்கள சாலை திருமண மண்டபம் ▶️கன்னங்குறிச்சி கே ஏ டி திருமண மண்டபம் கன்னங்குறிச்சி ▶️அயோத்தியாபட்டணம் பருத்திக்காடு ஐ சி எம் சி வளாகம்
▶️ஆத்தூர் சந்தோஷ் திருமண மண்டபம் மோட்டூர் ▶️பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெள்ளாளப்பட்டி

error: Content is protected !!