News September 16, 2025
TTF வாசனுக்கு திருமணம் முடிந்தது ❤️❤️ PHOTOS

Finally.. டும் டும் டும் கெட்டிமேளம் இசைக்க <<17729120>>ஸ்வீட்டியை<<>> கரம்பிடித்தார் TTF வாசன். பிரபல ரைடர் Vlogger ஆன இவர், மணக்கோலத்தில் உள்ள போட்டோவை பகிர்ந்து, திருமணம் முடிந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆனால், மணப்பெண்ணின் முகத்தை அவர் மறைத்துள்ளார். இதனால் அவர் யார் என்று சொல்லுங்கள் TTF என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். மேலும், புதுமண தம்பதிக்கு வாழ்த்து மழையும் பொழிந்து வருகிறது.
Similar News
News September 17, 2025
இலவச வர்த்தக ஒப்பந்தம்: டென்மார்க் PM உடன் பேச்சு

இந்தியா – ஐரோப்பிய யூனியன் உடனான இலவச வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, டென்மார்க் PM மெட்டெ ப்ரெட்ரிக்சன் உடன் PM மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசித்தார். ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்க உள்ள டென்மார்க்கிற்கு PM மோடி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உக்ரைன் போரை விரைவில் முடிவிற்கு கொண்டு வருவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
News September 17, 2025
யூசுஃப் பதான் அரசு நில ஆக்கிரமிப்பாளர்: கோர்ட்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான் நில ஆக்கிரமிப்பாளர் என குஜராத் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பிரபலங்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்றும் கண்டித்துள்ளது. அவரது வீட்டிற்கு அருகே இருந்த அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கடந்த 2012-ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நிலத்தை வாங்க விரும்புவதாக அவர் தாக்கல் செய்த மனுவை சமீபத்தில் கோர்ட் நிராகரித்தது.
News September 17, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 17, புரட்டாசி 1 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4.30 PM – 5.00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சுன்யதிதி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.