News September 16, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (16-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 17, 2025
சங்கரன்கோவில் பகுதியில் மின்தடை அறிவிப்பு

சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் திரு. மா.பாலசுப்ரமணியம் அவர்களின் செய்தி குறிப்பு நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தில் வரும் 18.09.2025 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் அன்று பெரியகோவிலான்குளம். சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனர், வேப்பங்குளம். சில்லிகுளம் சூரங்குடி ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
News September 16, 2025
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 26.08.2025 முதல் 12.09.2025 வரை மாவட்ட அளவிலான (ம) மண்டல அளவிலான போட்டிகள் பள்ளி பிரிவு, கல்லூரி பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, பொது மக்கள் பிரிவு, அரசு ஊழியர்கள் பிரிவு என ஐந்து பிரிவுகளில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா தென்காசி மாவட்ட விளையாட்டு மையத்தில் (செப்.18) காலை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
News September 16, 2025
தென்காசி: ஆயுதபூஜை & தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு

செங்கோட்டை – சென்னை சென்ட்ரல் மார்க்கமாக சிறப்பு அதிவிரைவு ரயில் வண்டி எண்(06121) செங்கோட்டையில் இருந்து ஒவ்வொரு வியாழன் கிழமையும் செப்- 24 முதல் அக்-23 வரை ஆயுதபூஜை & தீபாவளியை முன்னிட்டு இயங்க இருக்கிறது. இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது. (நிறுத்தங்கள் : மதுரை , திண்டுக்கல், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி)