News April 12, 2024

ஊட்டி பூங்காவில் விழிப்புணர்வு நிகழ்வு

image

நீலகிரியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தோட்ட கலைத்துறை சார்பில் உதகை அரசாங்க பூங்காவில் நேற்று (ஏப்.11) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 240 மலர் தொட்டிகளை கொண்டு ‘ஏப்ரல் 19’ வடிவமைக்கப்பட்டது. இதில் பங்கேற்ற சுற்றுலா பயணிகளிடம் கலெக்டர், தவறாமல் வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.

Similar News

News September 19, 2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

image

ஊட்டி பிங்கர் போஸ்ட் அருகே உள்ள நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News September 19, 2025

தூய்மை பணியை மேற்கொள்ள ஆட்சியர் உறுதிமொழி!

image

தூய்மை மிஷின் 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., பல்வேறு அலுவலகங்களில் அந்தந்த துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தூய்மை பணியில் மேற்கொள்ள வேண்டும், என அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

News September 19, 2025

நீலகிரி: யானை தாக்கி முதியவர் பலி!

image

நீலகிரி மாவட்டத்தில் மனித – விலங்கு மோதல் அதிகரித்து வரும் நிலையில், மசினகுடி பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 71 வயது மதிக்கத்தக்க மேத்தா என்பவரை காட்டு யானை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!