News September 16, 2025

பணத்துக்காக படுக்கையை பகிர மாட்டேன்: தமிழ் நடிகை

image

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி நடிகை தனுஸ்ரீ பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக பிக்பாஸ் வாய்ப்புகளை மறுத்து வருவதாக தெரிவித்த அவர், ‘இந்த ஆண்டு ₹1.65 கோடி தருவதாக சொன்னார்கள். ஆனால், ஒரு ரியாலிட்டி ஷோவில் ஒரே படுக்கையில் இன்னொருவருடன் உறங்க நான் விரும்பவில்லை. ஆண்களும் பெண்களும் ஒரே ஹாலில், ஒரே பெட்டில் படுத்திருப்பதை நான் எப்படி ஏற்க முடியும்?’ என்று கொட்டித் தீர்த்துள்ளார்.

Similar News

News September 17, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 17, புரட்டாசி 1 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4.30 PM – 5.00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சுன்யதிதி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.

News September 17, 2025

நீங்க எவ்வளவு நேரம் ஸ்கிரீன் பாக்குறீங்க?

image

காலை அலாரம் அடித்தவுடன் எழுந்திருப்பதில் தொடங்கி, இரவு தூங்கும் வரை டிஜிட்டல் ஸ்கிரீனை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம். ஆனால், வெறும் 1 மணி நேரம் ஸ்கிரீன்களை பார்ப்பதாலேயே Myopia எனும் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும் அபாயம் 21% உள்ளதாக JAMA Network Open ஆய்வில் தெரியவந்துள்ளது. 3.35 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. நீங்க எவ்வளவு நேரம் ஸ்கிரீன் பாக்குறீங்க?

News September 17, 2025

PM மோடிக்கு நண்பர் டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து

image

PM மோடிக்கு தொலைபேசி மூலம் டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து PM தனது X பக்கத்தில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நண்பர் டிரம்பிற்கு நன்றி எனவும், உக்ரைனில் அமைதி நிலவ அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்போம் என்றும் பதிவிட்டுள்ளார். வரிவிதிப்பு விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!