News September 16, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு.. HAPPY NEWS

பள்ளிக்கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், TET தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. TET தேர்வு எழுத தங்கள் துறையிடமிருந்து தடையில்லா சான்று (NOC) பெற வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முதன்மை கல்வி அலுவலகங்களில் NOC-க்காக அலையும் வேலை மிச்சம் என ஆசிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர். SHARE IT.
Similar News
News September 17, 2025
திருமணமானவர்களுக்கு மட்டும்!

40 வயதுக்கு மேல் உள்ளவர்கள், வாரம் 2 முறையாவது உறவில் ஈடுபடுவது, மாரடைப்பு அபாயத்தை 50% குறைப்பதாக அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, 40 முதல் 70 வயது வரையான ஆயிரக்கணக்கான ஆண்களிடம் 16 ஆண்டுகள் ஆய்வு செய்தனர். இதன்முடிவில், உடலுறவுக்கும் இதயநலத்துக்கும் தொடர்பு உள்ளதை கண்டறிந்தனர். மாதத்தில் ஒருமுறைக்கு குறைவாக உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம்.
News September 17, 2025
ஆயுதங்களை ஒப்படைக்க தயார்: மாவோயிஸ்ட் அறிவிப்பு

நிபந்தனையுடன் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் என்று அமித்ஷாவுக்கு மாவோயிஸ்ட் இயக்கம் கடிதம் எழுதியுள்ளது. ஆபரேஷன் ககர் நடவடிக்கை மற்றும் என்கவுன்ட்டர்களை உடனடியாக நிறுத்தினால் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 மார்ச்சுக்குள் மாவோயிஸ்ட்களை முற்றிலும் ஒழிக்க அமித்ஷா காலக்கெடு நிர்ணயித்த நிலையில், மாவோயிஸ்டுகளின் அறிவிப்பு பாதுகாப்பு படைகளுக்கு பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.
News September 17, 2025
திமுகவுக்கு ஜாக்பாட்? டெல்லி ஆலோசனையின் பின்னணி

டெல்லியில் அமித்ஷாவை EPS சந்தித்த அதே நேரத்தில், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இது அதிமுகவில் மட்டுமல்ல, தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், கொங்கு பகுதியை திமுக குறிவைத்திருக்கும் நிலையில், அங்குள்ள அதிமுக தலைவர்களுக்கு இடையேயான உரசல் திமுகவுக்கு சாதகமாகிவிடக் கூடாது என்பதில் பாஜக தலைமை கவனமாக உள்ளதாக கூறப்படுகிறது.