News April 12, 2024
டிஜிட்டல் சேவை ஏற்றுமதியில் 4ஆம் இடத்தில் இந்தியா

உலகளவில் டிஜிட்டல் சேவை ஏற்றுமதியில், 4ஆவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் ‘உலகளாவிய வர்த்தக கண்ணோட்டம் & புள்ளியியல்’ அறிக்கையில், 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023இல் டிஜிட்டல் சேவை ஏற்றுமதியில், இந்தியா 17% வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதன் மதிப்பு ₹21.42 லட்சம் கோடியாகும். இத்துறையில், சீனா 4% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News April 26, 2025
ராகு – கேது பெயர்ச்சி நிறைவு

வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி இன்று மாலை 4.28 மணிக்கு ராகு – கேது பெயர்ச்சி நடைபெற்றது. 18 மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெயரும் ராகு பகவான், மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்திருப்பதாக திருநாகேஸ்வரம் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல, கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
News April 26, 2025
BREAKING: போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்

போப் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் போப் 21-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து தேவாலயத்தில் அவரின் உடல் 3 நாள்கள் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். பின்னர் இன்று வாடிகனுக்கு வெளியே உள்ள Santa Maria Maggiore basilica தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் கத்தோலிக்க மதத் தலைவர்கள், உலகத் தலைவர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
News April 26, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தஞ்சை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று IMD தெரிவித்துள்ளது. இதன்படி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.