News September 16, 2025
JUST NOW விழுப்புரம்: அன்புமணியின் பொதுக்குழு செல்லாது

அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது, அதில் நியமிக்கப்பட்ட பதவிகளும் செல்லாது, என இன்று(செப்.16) விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் MLA ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். ராமதாசுக்கு தெரியாமல் கட்சி அலுவலகத்தின் முகவரி தேர்தல் ஆணையத்தில் மாற்றப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தலைவரல்லாத அன்புமணி எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News September 16, 2025
விழுப்புரம்: 16 உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 16 காவல் உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றிய விஜய், கெடார் காவல் நிலையத்திற்கும், கெடார் காவல் நிலையத்தில் பணியாற்றிய விஜயகுமார், மயிலம் காவல் நிலையத்திற்கும், ஆரோவில் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆனந்தன், செஞ்சி காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
News September 16, 2025
விழுப்புரம்: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்.
News September 16, 2025
விழுப்புரம்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<