News September 16, 2025

பாமக MLA-க்கள் ஒற்றுமையா இருக்கணும்: உதயநிதி

image

சேலத்தில் நடந்த அரசு விழா ஒன்றில் பாமக MLA-க்களான அருள் (ராமதாஸ் தரப்பு), சதாசிவம் (அன்புமணி தரப்பு) ஆகியோர், தமிழக அரசை பாராட்டியிருந்தனர். இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த 2 MLA-க்கள் போட்டி போட்டு அரசை பாராட்டியதாக உதயநிதி கூறியுள்ளார். மேலும், இருவரும் ஒரே மாதிரி பேசியதாக தெரிவித்த அவர், இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என, பாமக பிரச்னையை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 16, 2025

ஒரு நைட் தங்க ₹60,000 வாடகை! எங்கே தெரியுமா?

image

ஊட்டி ஹேர்பின் வளைவில் சென்றாலே பலர் கண்களை மூடிக்கொள்வதுண்டு. ஏனென்றால், உயரம் என்றால் அவ்வளவு பயம். துபாயிலோ 377மீ உயரத்தில் சொகுசு ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. வானுயர ஹோட்டலில் மொத்தமுள்ள 82 தளங்களில் 1,004 ரூம்கள் உள்ளன. ஸ்கை கார்டன், ஸ்கை ரெஸ்டாரன்டும் இருக்கின்றன. ₹4,803 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஹோட்டலில், ஓரிரவு தங்க ஒரு நாளுக்கு குறைந்தது ₹60,000 செலவாகுமாம். புக் பண்ணிடலாமா?

News September 16, 2025

BREAKING: முடிவை மாற்றிய இபிஎஸ்.. சற்றுமுன் சந்தித்தார்

image

டெல்லி சென்ற இபிஎஸ் திடீர் திருப்பமாக அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதிமுக விவகாரங்களில் டெல்லி தலையிடுவதில்லை என நேற்று அவர் குறிப்பிட்டார். இதனால், செங்கோட்டையன் விவகாரத்தில் அவர் பாஜக தலைவர்களை சந்திக்க மாட்டார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், அமித்ஷாவை சந்தித்து அவர் பேசியுள்ளார். கடந்த வாரம் செங்கோட்டையனும் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். அதிமுகவில் அடுத்து என்ன நடக்குமோ?

News September 16, 2025

ஆரோக்கியமான கல்லீரல் வேண்டுமா?

image

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவு கட்டுபாடு மிகவும் அவசியம். ஆரோக்கியமான கல்லீரல் நோயற்ற வாழ்வுக்கு வழிவகுக்கிறது. எனவே, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள சில உணவுகளை நாம் தவிர்ப்பது நல்லது. அது என்ன என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. மேலும், தவிர்க்க வேண்டியவை ஏதேனும் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!