News April 12, 2024
சற்றுமுன்: பாஜகவில் இருந்து விலகல்

மகாராஷ்டிராவின் பாஜக தலைவர் தைரியஷீல் மோஹிதே பாட்டீல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். மாதா தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதனால், கட்சியில் இருந்து விலகிய அவர், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Similar News
News April 26, 2025
வருமா ‘வா வாத்தியார்’ ?

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் எப்போது வெளிவரும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. இன்னும் சில நாள் கார்த்தியின் கால்ஷீட் வேண்டும் என இயக்குநர் நலன் குமாரசாமி கேட்கிறாராம். ஆனால், சர்தார் 2-ல் பிஸியாக இருக்கும் கார்த்தி, இப்போது கால்ஷீட் தர முடியாது என அடம் பிடிக்கிறாராம். இருவரும் மாறி மாறி இழுத்தடிப்பதால், படம் எப்போது வெளிவரும் என்ற அறிகுறியே இல்லாமல் இருக்கிறது.
News April 26, 2025
பாகிஸ்தானுடன் இனி விளையாடக்கூடாது : கங்குலி

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட்டை இந்தியா முற்றிலும் துண்டிக்க வேண்டும் என வலியுறுத்திய சவுரவ் கங்குலி, ஐசிசி மற்றும் ஆசிய போட்டிகளில் கூட பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் கங்குலி தெரிவித்தார். முன்னதாக, எந்தவொரு போட்டியிலும் பாகிஸ்தானுடன் இந்தியா மோதப் போவதில்லை என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.
News April 26, 2025
14 தீவிரவாதிகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 14 தீவிரவாதிகள் குறித்த தகவலை புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. 20-40 வயதுடைய இவர்கள் பாகிஸ்தானின் நிதியுதவியுடன் J&K-ல் தங்கி, தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.