News September 16, 2025
கரூர்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சேலம் இரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: மைசூர் -காரைக்குடி சிறப்ப ரயில் வாரம் இருமுறை இயக்கப்படுகிறது. மைசூர்-காரைக்குடி ரயில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9.20 மணிக்கு மைசூரிலிருந்து புறப்பட்டு பெங்களூர், சேலம், நாமக்கல், கரூர் வழியாக அடுத்த நாள் காலை 11 மணிக்கு காரைக்குடி வருகிறது. இதை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளவும்.
Similar News
News September 16, 2025
கரூர்: 8 ஆம் வகுப்பு போதும்! அரசு வேலை…

கரூர் மக்களே, 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 16, 2025
கரூரில் மினி பஸ் மோதல் முதியவர் படுகாயம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா புஞ்சை காலக்குறிச்சியை சேர்ந்தவர் நடராஜ் 70. இவர் நேற்று கரூர் மினி பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது யுவராஜ் ஓட்டி வந்த மினி பேருந்து மோதியதில் நடராஜ் படுகாயம் அடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். நடராஜ் மகள் மேனகா புகாரில் கரூர் நகர போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 16, 2025
கரூரில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக பலி!

கரூர்: சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரகுமார்(38). இவர் சடையம்பாளையத்தில் கார்ட் ர்போடு கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில், நேற்று(செப்.15) நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்தவர் தலையில் பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.