News September 16, 2025
BREAKING: கூட்டணி முடிவை வெளியிட்டார் டிடிவி

டெல்லி பாஜக தலைமை எல்லாத்தையும் சரி செய்துவிடும் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம்; கூட்டணிக்கு அழைத்தாலும் இனி போக மாட்டேன் என்று TTV அறிவித்துள்ளார். விஜய் மற்றும் தனியாக போட்டியிட்டு வந்த சீமானும் இந்தமுறை கூட்டணி அமைக்கும் முயற்சியில் இருப்பது எனக்கு தெரியும் என சூசகமாகவும் தெரிவித்துள்ளார். இதனால், 2026-ல் விஜய் அல்லது சீமானுடன் கூட்டணி அமைத்து TTV போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது.
Similar News
News September 16, 2025
இந்தி திணிப்புக்கு எதிராக பொங்கிய விஜய்!

இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என அமித்ஷா கூறியது, வன்மையாக கண்டிக்கதக்கது என்றும் வலுக்கட்டாயமாக ஒரு மொழியை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் விஜய் கூறியுள்ளார். எனவே, இந்தி திவாஸ் அன்று தெரிவித்த கருத்தை அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார்.
News September 16, 2025
ஆயுத பூஜை விடுமுறை.. செப்.23 முதல் சிறப்பு அறிவிப்பு

<<17708234>>தசரா<<>>, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, செப்.23 – அக்.23 வரை சென்னை எழும்பூர் – தூத்துக்குடி இடையே இரு மார்க்கத்திலும் வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளது. அதேபோல், செப். 28 – அக் – 26 வரை தாம்பரம் – நாகர்கோவில் இடையேயும், செப்.25 – அக்.23 வரை சென்னை – கோவை போத்தனூர் இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News September 16, 2025
காரணம் கண்டறிய முடியாத மர்மமான நிகழ்வுகள்

உலகில் நிகழும் பல அதிசயங்கள் மர்மமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு மர்மமான நிகழ்வுகளுக்கு இதுவரை காரணமே கண்டறிய முடியவில்லை. மேலே, அவற்றை போட்டோக்களாக இணைத்து இருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. உங்களுக்கு காரணம் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க. மேலும், இதுபோன்று வேறு ஏதேனும் மர்மமான நிகழ்வு உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க!