News September 16, 2025
விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

சேலம் சரகத்துக்கு உட்பட்ட சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 1,534 பேருக்கு ரூபாய் 57 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும், 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 67 வாகன ஓட்டுனரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Similar News
News September 16, 2025
சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (செப்.16) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சேலம் மாநகரத்தில் உள்ள பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 16, 2025
தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

ஆயுதப்பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (செப்.16) சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்-செங்கோட்டை-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில்களை (06121/06122) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் வரும் செப்.24 முதல் அக்.23 வரை இயக்கப்படுகின்றன. சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
News September 16, 2025
சேலம் மாநகர காவல்துறை சார்பில் பொது மக்களுக்கு வேண்டுகோள்!

சேலம் மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தங்களது வாட்ஸ்ஆப் மற்றும் மெசேஜ் வழியாக வரும் எந்த ஒரு செயலியையும் டவுன்லோட் செய்ய வேண்டாம் எனவும், அதில் பல்வேறு வைரஸ்களை கொண்டு, உங்களது சொந்த விவரங்களை திருடக்கூடும் என்பதால், இத்தகைய செயலிகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் என, சேலம் மாநகர காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது.