News September 16, 2025
நீலகிரி மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

கூடலுார், ஓவேலி, குண்டம்புழா வனப்பகுதிகளில் உலாவரும் காட்டு யானைகள், இரவு நேரத்தில் பாண்டியர் டான்டீ தேயிலை தோட்டம் வழியாக வருகின்றன. பின், இரும்புபாலம், பால்மேடு, மரப்பாலம், ஆமைக்குளம் வழியாக சாலையை கடந்து கூடலுார் – கோழிக்கோடு சாலையை இரவு மற்றும் காலை நேரத்தில் காட்டு யானைகள் கடந்து செல்வதால், ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,’ என, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Similar News
News September 16, 2025
நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாம் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை ஊட்டி வட்டம் தும்மனாட்டி பகுதிக்கான முகம் கெந்தோரை அருகே உள்ள சமுதாய கூடத்திலும் நடைபெறுகிறது. பொது மக்கள் தங்கள் பகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முகாம்களில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
நீலகிரி யானை வழித்தட கட்டடங்கள் இனி இடிக்கப்படும்!

நீலகிரி மாவட்டம் மசினகுடி சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள 39தங்கும் விடுதி கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். யானைகள் வழித்தடத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற 2008ல் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 2018ல் 39 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அக்கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளது.
News September 16, 2025
அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு வரவேற்பு!

நீலகிரி மாவட்டம், உதகைக்கு வருகை புரிந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் மு.வாசிம் ராஜா மற்றும் உதகை நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளுடன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.