News September 16, 2025

பெரிய பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் விலையை ஏத்தலாமா?

image

காந்தாரா சாப்டர் 1 படம் பெரிய பட்ஜெட் என்பதால், கர்நாடகாவில் சாதாரண திரையரங்குகளின் அடிப்படை விலையான ₹236-ஐ உயர்த்த வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் படி ஏறியுள்ளது. டிக்கெட் விலை குறைவாக இருந்தால் தானே, மக்கள் படம் பார்த்து பெரிய வசூலை எடுக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். முதல் நாள் வசூல் போஸ்டருக்காக மக்களை பலியாடாக்க வேண்டும் எனவும் விமர்சிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

Similar News

News September 16, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. மக்களுக்கு ஏமாற்றம்

image

புதிதாக 17 லட்சத்திற்கு மேற்பட்டோர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். அவர்களது விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல், அண்ணா பிறந்தநாளையொட்டி செப்.15-ல் வெளியாகும் என கூறப்பட்டது. இதனால், அரசின் அறிவிப்பு வெளியாகும் என நேற்று ஆர்வமுடன் காத்திருந்த மகளிருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுமாறு அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 16, 2025

2-வது திருமணம்: வருத்தத்தில் மீனா!

image

நடிகை மீனா 2-வது திருமணம் செய்யப்போகிறார், இந்த நடிகருடன் தான் திருமணம் என தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இதுகுறித்து, அண்மையில் தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மீனா, இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து விவாகரத்தான நடிகர்களுடன் தனக்கு திருமணம் என வெளிவந்த செய்திகள் மனதளவில் மிகவும் வருத்தமடைய செய்ததாக கூறினார். மீனாவின் கணவர் வித்யாசாகர் 2022-ல் காலமானார்.

News September 16, 2025

விஜய் கட்சிக்கு விரைவில் END: வைகைச் செல்வன்

image

தவெகவை சனிக்கிழமை கட்சி என்று அதிமுகவின் வைகைச் செல்வன் விமர்சித்துள்ளார். எப்படி ஐடி ஊழியர்கள் வீக் எண்டில் எங்காவது ஜாலியாக சென்று வருவார்களோ, அதுமாதிரியான Weekend கட்சி தான் விஜய்யின் கட்சி என்று அவர் கூறியுள்ளார். அக்கட்சி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே செயல்படும் கட்சி என்றும், அது விரைவிலேயே END கட்சி ஆகிவிடும் எனவும் அவர் கிண்டலாக பேசியுள்ளார்.

error: Content is protected !!