News September 16, 2025
கள்ளக்குறிச்சியில் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

கள்ளக்குறிச்சியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. 18 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபம் நிறுவன உரிமையாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
Similar News
News September 16, 2025
கள்ளக்குறிச்சி: ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000

பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். <<17727017>>தொடர்ச்சி!<<>> SHARE IT
News September 16, 2025
அன்புக் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?

தகுதி உடைய குழந்தைகள் பின்வரும் ஆவணங்களை கொண்டு அன்பு கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
1. குடும்ப அட்டையின் நகல்
2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்
3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)
4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்
மேலும் விவரங்களுக்கு இந்த <<17727011>>லிங்கை <<>>பார்க்கவும் தேவை உடையவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!
News September 16, 2025
சங்கராபுரம் அருகே பதற்றம்! போலீசார் குவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம், மேலப்பட்டு கிராமத்தில் முனியப்பன் கோயிலுக்கு பொங்கல் வைக்க இரு சமூகத்தினர் இடையே மோதல் இருந்து வந்தது. மேலும் பொங்கல் வைக்கும் இடம் அரசுக்குச் சொந்தமான இடம் என கூறி காவல்துறையும் பொங்கல் வைக்க தடை விதித்தது. இன்று தடையை மீறி கிராம மக்கள் ஏற்பாடுகளைச் செய்த நிலையில், 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.