News September 16, 2025
புதுகை : குறைதீர்க்கும் கூட்டத்தில் விஷம் குடித்த நபர்

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரைச் சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான். நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த அவர் நேர்முக உதவியாளர் எஸ்.திருமாலிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். உறவினர்கள் சிலர் சொத்து பிரச்சனை குறித்து பலமுறை அதிகாரிகளிடமும் காவல் துறையினரிடமும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி பூச்சிமருந்தை குடித்து விட்டார். இதனையடுத்து மீட்கப்பட்ட அவர் புதுகை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News November 1, 2025
புதுக்கோட்டை: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 1, 2025
புதுக்கோட்டை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

புதுக்கோட்டை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 1, 2025
புதுக்கோட்டை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


