News September 16, 2025
நகைக்கடன்.. வங்கிக்கு படையெடுக்கும் தமிழக மக்கள்

2021 தேர்தலை போலவே, 2026 தேர்தலையொட்டி நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால், இதுவரை நகை அடமானக் கடன் வாங்காதவர்களும் கூட 3 – 5 சவரன் வரை நகைகளை வைத்து கடன் பெற, கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனுக்கு இலக்கைவிட அதிக தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News September 16, 2025
ஆண்களே! விந்தணு அதிகரிக்க இந்த பழங்களை சாப்பிடுங்க

இந்தியாவில் விந்தணு குறைப்பாட்டால் சுமார் 1.3 கோடி ஆண்கள் தவிப்பதாக தரவுகள் சொல்கிறது. இந்த பிரச்னை உங்களுக்கு ஏற்படாமல் இருக்க வைட்டமின் சி, துத்தநாகம், ஆண்டி ஆக்ஸிடன்ட்டுகள், இரும்பு சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது அவசியம். அது என்னென்ன பழங்கள் என்பதை தெரிந்துக்கொள்ள போட்டோக்களை SWIPE செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE செய்யுங்கள்.
News September 16, 2025
EPS-க்கு பிரமாண்ட கூட்டம் கூடுகிறது: அண்ணாமலை

EPS-ன் சுற்றுப்பயணத்தில் எதிர்பார்த்ததை விட பிரமாண்ட கூட்டம் கூடுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சுற்றுப்பயணத்தில் EPS பாஜகவை பாராட்டி பேசுவதாக குறிப்பிட்ட அண்ணாமலை, தமிழகம் முழுவதும் NDA தலைவர்கள் கூட்டுப் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். டெங்கு பாதிப்பால் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில், பிற்பகலில் அவர் கூட்டத்திற்கு வருகை தந்தார்.
News September 16, 2025
நாளை வெளியாகும் 8-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள்

தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ளது. கடந்த ஆகஸ்ட் 18 முதல் 22 வரை தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகவுள்ளது. இதில் ESLC result 2025 என்பதனை கிளிக் செய்து விவரங்களை பதிவிட்டு தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.