News September 16, 2025

தர்மபுரி: உணவு பாதுகாப்புத் துறை திடீர் ஆய்வு

image

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கைலாஷ் குமார் தலைமையில், ஒட்டப்பட்டி, தொழில் மையம் மற்றும் அதியமான் கோட்டை பகுதிகளில் உள்ள துரித உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், காலாவதியான 2 கிலோ உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News

News September 16, 2025

ஒகேனக்கலில் முழுவதுமாக தடை நீக்கம்

image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 9,500 கன அடியாக குறைந்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால், குளிக்கவும், பரிசல் சவாரிக்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

News September 16, 2025

தர்மபுரியில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

image

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஊதியம் வழங்காததைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் இன்று காலை 9 மணி முதல் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊதியம் கிடைத்த பிறகே பணிக்குத் திரும்புவோம் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News September 16, 2025

தருமபுரி: டிகிரி இருந்தால் போதும்! ரயில்வேயில் வேலை

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!