News September 16, 2025
திருத்தணி முருகன் கோயில் ரூ.1.47 கோடி உண்டியல் வசூல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் 26 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் ரூ.1.47 கோடி செலுத்தி இருந்ததாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணி நிறைவில் ரூ.1.43 கோடி, திருப்பணி உண்டியல் காணிக்கை ரூ.4.44 லட்சம் என மொத்தம் 1 கோடியே 47 லட்சத்து 60 ஆயிரத்து 49 ரூ.ரொக்கம், 732gm தங்கம்,16,330gm வெள்ளி என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News September 16, 2025
ஆவடியில் மர்ம காய்ச்சல் +2 மாணவி பலி

ஆவடி நந்தவனமேட்டூர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதுமிதா (16). இவர் ஆவடி தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த மதுமிதாவை அவரது பெற்றோர் ஆவடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் நேற்று இரவு அவருக்கு மீண்டும் காய்ச்சல் அதிகமானதால் ஆவடியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
News September 16, 2025
திருவள்ளூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 16, 2025
திருவள்ளூர்: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<