News September 16, 2025
விகேபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

விக்கிரமசிங்கபுரம் கட்டபொம்மன் காலணியில் நகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது.குப்பை கிடங்கில் நேற்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த அம்பை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குப்பை கிடங்கில் தீப்பிடித்ததால் அங்கிருந்து கிளம்பிய புகையால் கட்டபொம்மன் காலணியில் உள்ளவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
Similar News
News November 11, 2025
நெல்லை: கொடுமுடியாறு அணையில் நீர் திறப்பு

நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கபட்டது. 52.50 அடி உயரமுள்ள இந்த அணையின் நீர்மட்டம், கடந்த மாதம் பெய்த மழையால் 50 அடி தாண்டியது. தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 49 அடியாக உள்ளதால் நாங்குநேரி ராதாபுரம் வட்டங்களில் உள்ள விவசாயிகள் கோரிக்கை ஏற்று, அணையை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதால் பேரவை தலைவர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார்.
News November 11, 2025
நெல்லை: டிகிரி போதும்…வங்கியில் வேலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 11, 2025
நெல்லையில் பெண் தீக்குளித்து தற்கொலை

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தை சேர்ந்த அமுதவள்ளி மகள் உடல் நல குறைவால் கடந்த ஆண்டு அம்பையில் உயிரிழந்தார். இதனால் தீராத சோகத்தில் ஒராண்டாக வசித்து வந்த அமுதவள்ளி நேற்று அதிகாலை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இதுக்குறித்து வி கே புரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


