News September 16, 2025
மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் மூடப்படவில்லை

மயிலாடுதுறை காவிரி நகர் ரயில்வே மேம்பாலம் பழுதடைந்ததால் மூன்று மாதங்களுக்கு அவ்வழியாக போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக நேற்று தகவல் பரவியது. இந்நிலையில் நேற்று சிறிது நேரம் போக்குவரத்தை துண்டித்து சோதனை மட்டுமே நடைபெற்றது. தற்பொழுது மேம்பாலம் மூடப்படவில்லை பராமரிப்பு பணிக்காக முறையான அறிவிப்பு முன்னதாகவே கொடுக்கப்பட்ட பின்னரே மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 16, 2025
மயிலாடுதுறையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகேயன் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் பானுமதி முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கனியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News September 16, 2025
மயிலாடுதுறை: ரூ.35,000 சம்பளம், தவறவிடாதீர்கள்!

மயிலாடுதுறை: படித்த இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை பார்க்க ஆசை இருந்தால் இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்.
⏩பிரிவு: மத்திய அரசு வேலை
⏩துறை: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
⏩பணி: Station Controller
⏩காலியிடங்கள்: 368
⏩சம்பளம்: ரூ.35,400
⏩வயது வரம்பு: 20 முதல் 33 வரை
⏩கல்வி தகுதி:Any Degree
⏩ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click <
⏩கடைசி தேதி: 14.10.2025
பயனுள்ள இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 16, 2025
மயிலாடுதுறையில் குழந்தைகளுக்கு உதவி தொகை

மயிலாடுதுறையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளின் 18 வயது வரை இடைநில்லாமல் கல்வி தொடர உதவித்தொகை வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முதற்கட்டமாக 45 ஆண் குழந்தைகளுக்கும் 43 பெண் குழந்தைகளுக்கும் என மொத்தம் 88 குழந்தைகளுக்கு உதவி தொகைக்கான அடையாள அட்டைகள் நேற்று வழங்கப்பட்டது.