News September 16, 2025
காஞ்சி: கொலை செய்ய முயன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

பரந்தூர் கிராமத்தை சேர்ந்த விநாயகம் என்பவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த உறவினர்களான அரசு (எ) சேட்டு மற்றும் அவரது தந்தை திருமால் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் நடைபெற்ற இறுதிச்சங்கு நிகழ்வில் விநாயகத்தை வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்த வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து காஞ்சிபுரம் துணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News September 16, 2025
காஞ்சிபுரம் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

காஞ்சிபுரம், செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 19ம் தேதியன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக ஆலோசனைகள் வழங்கவுள்ளனர். (SHARE)
News September 16, 2025
காஞ்சிபுரத்தில் கரண்ட் கட்!

காஞ்சிபுரம், நீரவள்ளூர் துணைமின் நிலையத்தில் நாளை (செப்.,17) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் நீர்வள்ளூர், சின்னையன் சத்திரம், ராஜகுளம், தொடுர், மேல்மதுரமங்களம், கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்களம், செல்வழிமங்களம், சின்னிவாக்கம், மருதம், பரந்தூர், சிறுவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE)
News September 16, 2025
காஞ்சிபுரம்: ஆதார் கார்டில் இதை செய்து விட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <