News September 16, 2025
நீலகிரி ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!

நீலகிரி மாவட்டம், சீகூர் பள்ளத்தாக்கில், மாயார், சோலுார் உள்ளிட்ட பகுதிகள் யானை வழித்தடமாக உள்ளன. சீகூர் யானை வழித்தடத்தில் சீல் வைக்கப்பட்ட விடுதிகளை, இடித்து அகற்ற தற்போது, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ”யானைகள் வழித்தடத்தில் உள்ள, 39 தங்கும் விடுதிகளை விரைவில், இடிக்கபடும். யானைகள் வழித்தடம் குறித்து, டிஜிட்டல் வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
Similar News
News September 16, 2025
நீலகிரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சார்பில், உதகையில் வரும் 19ம் தேதி, காலை 10 மணி முதல், சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுய விவரம், கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 16, 2025
நீலகிரி மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

கூடலுார், ஓவேலி, குண்டம்புழா வனப்பகுதிகளில் உலாவரும் காட்டு யானைகள், இரவு நேரத்தில் பாண்டியர் டான்டீ தேயிலை தோட்டம் வழியாக வருகின்றன. பின், இரும்புபாலம், பால்மேடு, மரப்பாலம், ஆமைக்குளம் வழியாக சாலையை கடந்து கூடலுார் – கோழிக்கோடு சாலையை இரவு மற்றும் காலை நேரத்தில் காட்டு யானைகள் கடந்து செல்வதால், ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,’ என, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
News September 16, 2025
நீலகிரி மக்களே: இந்த நம்பர உடனே SAVE பண்ணுங்க

நீலகிரி மக்களே.. பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!