News April 12, 2024

நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

image

நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 15, 2026

திருநெல்வேலி போலீஸ் வீட்டில் திருட்டு

image

கல்லிடைகுறிச்சி பொன்மா நகரை சேர்ந்தவர் ஞானசுந்தர். இவர் விகேபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். கல்லிடைக்குறிச்சியில் உள்ள அவரது பூட்டி இருந்த வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டிலிருந்த விளக்கு, பித்தளை பொருட்கள், ரூ.4000 ரொக்க பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

News February 15, 2026

திருநெல்வேலி: பஸ் நேரங்களை தெரிஞ்சுக்க – CLICK

image

நெல்லை பேருந்து நிலையத்தில் 6 நடைமேடைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து நாங்குநேரி, ஏர்வாடி, வள்ளியூர், திசையன்விளை,களக்குடி, ரெட்டியார்பட்டி, கீழப்பிள்ளையார்குளம் உட்பட நெல்லையில் உள்ள பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <>க்ளிக்<<>> பண்ணி நம்ம ஊர்களுக்கு செல்லும் நேரத்தை தெரிஞ்சுக்கிட்டு உங்க பயணத்தை சுலபாமாக்குங்க.

News February 15, 2026

திருநெல்வேலி: அரசுப் பள்ளிக்குள் துப்பாக்கி தோட்டா..!

image

திருநெல்வேலி திம்மராஜபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சட்டசபை தேர்தல் பணிக்காக தயார் செய்யும் போது, பழைய ரக துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை தலைமையாசிரியர் போலீசில் ஒப்படைத்தார். மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் விசாரணை நடந்தது. தோட்டா காலாவதியானது; நவீன துப்பாக்கிக்கு பயன்படாதது என போலீசார் தெரிவித்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் விசாரணை நடக்கிறது.

error: Content is protected !!