News September 15, 2025

BREAKING: முடிவை மாற்றினார் இபிஎஸ்

image

செங்கோட்டையன் விவகாரத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை EPS ஆலோசிக்கவுள்ளதாக செய்தி பரவியது. இதனால், அவர் தனது தேர்தல் பரப்புரை பயணத்தை மாற்றியமைக்க முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அமித்ஷாவை சந்திக்கும் பிளான் இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தைவிட தன்மானமே முக்கியம் என்றும், மழை காரணமாகவே பரப்புரை பயணம் ஒத்திவைக்கப் பட்டதாகவும் EPS விளக்கம் அளித்துள்ளார்.

Similar News

News September 16, 2025

பாஜகவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ள இபிஎஸ்

image

பாஜகவுடன் கூட்டணி வைக்க என்ன காரணம் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஜெ., மறைந்த போது, சிலர் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாகவும், அப்போது அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் தான் என்று தெரிவித்த அவர், அந்த நன்றியை தான் எப்போதும் மறக்க மாட்டேன் என்றார். ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தது பாஜக என்பது புரிகிறது. ஆனால், ஆட்சியை கவிழ்க்க முயன்றவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?

News September 16, 2025

யுனெஸ்கோவில் சேர்க்கப்பட்ட 7 இந்திய தளங்கள்

image

இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் யுனெஸ்கோ 7 புதிய இயற்கை தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. *டெக்கான் ட்ராப்ஸ்(மகராஷ்டிரா) *செயின்ட் மேரி தீவு (கர்நாடகா) *மேகலாயன் ஏஜ் குகைகள்(மேகாலயா) *நாகா ஹில் ஓபியோலைட் (நாகலாந்து) *சிவப்பு மணல் மேடுகளான எர்ரா மட்டி டிபாலு (ஆந்திரா) *திருமலை மலைகள் (ஆந்திரா), *வர்கலா (கேரளா)

News September 16, 2025

ரஜினி பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்?

image

‘காலா’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷிக்கு, அவருடன் நீண்ட நாள்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்த ரசித் சிங்குடன் நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரசித் சிங், நடிப்பு பயிற்சி வழங்குபவராக உள்ளார். இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இணைந்து பங்கேற்றதால், இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியானது. இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களும் வைரலானது.

error: Content is protected !!