News September 15, 2025
பள்ளி மாணவிகளுக்கு ரூ.75,000/-க்கான வைப்புத்தொகை

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.75,000/- வழங்கும் திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்தில் 9 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.75,000/-க்கான வைப்புத்தொகை ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று வழங்கினார்.
Similar News
News September 16, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (செப்ட. 16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.
News September 15, 2025
அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பம் கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு வழங்கும் டாக்டர். அம்பேத்கர் விருது பெற தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். விருதுக்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் 20-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 15, 2025
வேலூர் விஐடி: கல்வி கடன் முகாம் ஒத்திவைப்பு

வேலூர் வி.ஐ.டி. வளாகத்தில், நாளை (செப்.16) நடைபெற இருந்த கல்வி கடன் முகாம், செப்.23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் வசதிக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த முகாமில், கல்விக்கடன் தொடர்பான அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.