News September 15, 2025
30GB இலவசம்.. செல்போன் ரீசார்ஜ் ஆபர்

பண்டிகை காலத்தையொட்டி குறிப்பிட்ட பிளான்களுக்கு சிறப்பு ஆபர்களை ஏர்டெல் அறிவித்துள்ளது. அதன்படி, ₹449 பிளானில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 30GB Google One storage இலவசமாக வழங்கப்படும். ₹349, ₹449 ஆகிய பிளான்களில், 22+ OTT தளங்களை 28 நாள்களுக்கு இலவசமாக காணலாம். இதுமட்டுமின்றி, Perplexity Pro AI access ஓராண்டுக்கும், Apple Music Premium 6 மாதங்களுக்கும் வழங்கப்படுகிறது. SHARE IT.
Similar News
News September 15, 2025
சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர்

உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 1,000 மீ ஓட்டத்தில், இந்திய வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இவர், நேற்று நடைபெற்ற 500 மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியிருந்தார். கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற உலக போட்டிகளின் 12-வது சீசனிலும் வெண்கலம் வென்றிருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த இவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.
News September 15, 2025
234 தொகுதிகளிலும் தனித்து போட்டி: ஹரி நாடார்

நாடார் மக்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில், நாடார் வேட்பாளர்களை நிறுத்தி, அவர்களுக்காக குரல் கொடுக்கும் நபராக நாங்கள் இருப்போம் என்று ஹரி நாடார் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் சத்திரிய சான்றோர் படை கட்சி தனித்தே நிற்கும் என்ற அவர், கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என கூறியுள்ளார். 2021 தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட அவர், 37,727 வாக்குகள் பெற்றிருந்தார்.
News September 15, 2025
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் இலை

நீரிழிவு நோயாளிகள் எப்போதும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேப்பிலை உதவியாக இருக்கும். வேப்பிலையில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வேப்பிலைகள் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் தினமும் 5-10 வேம்பு இலைகளை சாப்பிடுவதால் நல்ல பயன் கிடைக்கும். ஆனால் இந்த இலைகளை மருந்து அல்லது இன்சுலின் அளவிற்கு மாற்றாக கருத முடியாது.