News September 15, 2025
மூளையை தின்னும் அமீபா: 18 பேர் உயிரிழப்பு

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று வேகமெடுத்துள்ளது. இதுவரை 18 உயிரிழந்துள்ளதாகவும், 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மாசுபட்ட நீர்நிலைகளில், குளிக்கவோ, முகம் கழுவவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளத்திலிருந்து 17 வயது சிறுவனுக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளை குளோரினைட் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 15, 2025
234 தொகுதிகளிலும் தனித்து போட்டி: ஹரி நாடார்

நாடார் மக்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில், நாடார் வேட்பாளர்களை நிறுத்தி, அவர்களுக்காக குரல் கொடுக்கும் நபராக நாங்கள் இருப்போம் என்று ஹரி நாடார் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் சத்திரிய சான்றோர் படை கட்சி தனித்தே நிற்கும் என்ற அவர், கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என கூறியுள்ளார். 2021 தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட அவர், 37,727 வாக்குகள் பெற்றிருந்தார்.
News September 15, 2025
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் இலை

நீரிழிவு நோயாளிகள் எப்போதும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேப்பிலை உதவியாக இருக்கும். வேப்பிலையில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வேப்பிலைகள் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் தினமும் 5-10 வேம்பு இலைகளை சாப்பிடுவதால் நல்ல பயன் கிடைக்கும். ஆனால் இந்த இலைகளை மருந்து அல்லது இன்சுலின் அளவிற்கு மாற்றாக கருத முடியாது.
News September 15, 2025
4 முறை கர்ப்பமாக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 4 முறை கர்ப்பமாக்கியதாக ஜாய் கிரிசில்டா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 2 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பமாக்கிவிட்டு அதனை கருக்கலைப்பு செய்திருப்பதாக குறிப்பிட்ட அவர், தற்போது 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என கிரிசில்டா வலியுறுத்தியுள்ளார். சட்டவிரோத கருக்கலைப்பு விவகாரத்திலும் மாதம்பட்டி சிக்குவாரா?