News April 12, 2024
Apply Now: மத்திய அரசில் 400 பணியிடங்கள்

இந்திய அணுசக்தி கழகம் 400 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. Executive Trainee பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: B.Sc., B.E.,B.Tech., ME., M.Tech. வயது வரம்பு: 21- 26. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30. தேர்வு: GATE மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வு. ஊதிய வரம்பு: ₹55,000/-. கூடுதல் தகவல்களுக்கு <
Similar News
News November 13, 2025
மீண்டும் இருப்பிடத்தை மாற்றிய ஓபிஎஸ்!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்த வீட்டிலிருந்து நந்தனத்திற்கு OPS குடிபெயர்ந்துள்ளார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் வீடும், முதல் தளத்தில் ஆபிஸும் செயல்பட உள்ளது. அரசு பங்களாவை காலி செய்த பிறகு ஆழ்வார்பேட்டை, தி.நகர் என அடுத்தடுத்து தனது இருப்பிடத்தை மாற்றி வருகிறார். ஜோதிடத்தில் அதிக ஈடுபாடு கொண்ட OPS, ஜோதிடர் கூறியதன் பேரிலேயே தற்போது வீட்டை மாற்றியதாக கூறப்படுகிறது.
News November 13, 2025
விரைவில் விஜய்யின் சுற்றுப்பயணம்: அருண்ராஜ்

கரூர் துயருக்கு பிறகு, சமீபத்தில் பொதுக்குழுவை கூட்டிய விஜய், கட்சி பணிகளை விரைவுபடுத்தினார். இந்நிலையில், விரைவில் விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தவெக அருண்ராஜ் கூறியுள்ளார். கரூர் சம்பவத்திற்கு பிறகும் தமிழக மக்கள், விஜய் மீது வைத்துள்ள அன்பு குறையவில்லை என்றும் தெரிவித்தார். திமுக, பாஜகவை தவிர, தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளை அரவணைப்போம் என்று தெளிவுபடுத்தினார்.
News November 13, 2025
வீடியோ கேமில் புதிய சாதனை படைத்த GTA 5

1997-ம் ஆண்டு அறிமுகமான GTA வீடியோ கேமிற்கு உலகளவில் இன்று வரை பல கோடி ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2013-ல் இதன் 5-ம் பாகமான GTA 5 வெளியான நிலையில், இதுவரை 22 கோடி பிரதிகள் விற்கப்பட்டு, புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்திற்கு ₹88,625 கோடி வருவாய் கிடைத்துள்ளது. புதிய திரில்லிங் அம்சங்களுடன் கூடிய GTA 6-ம் பாகம் அடுத்தாண்டு நவம்பரில் வெளியாகிறது.


