News September 15, 2025

தஞ்சாவூர்: பட்டா, சிட்டா விபரங்களை அறிய எளிய வழி!

image

தஞ்சாவூர் மக்களே…உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா திருத்தம், புல எல்லை வரைபடம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE மற்றும் LIKE பண்ணுங்க..

Similar News

News September 15, 2025

தஞ்சாவூர்: தோஷங்களுக்கு தீர்வு கொடுக்கும் கோயில்!

image

தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள மூலை ஆஞ்சநேயர் பற்றி தெரியுமா? படிப்பில் தடை, திருமணத்தடை, வியாதிகள் போற்றவற்றிக்கு, மூலை அனுமாரை மூல நட்சத்திரத்தில் 18 அமாவாசைகள் 18 முறை வலம் வந்து மூலவருக்கு 18 எலுமிச்சை பழங்களான மாலையை சாற்றி வழிபட்டால் கிரக, வாஸ்து தோஷங்கள் நீங்கும். மார்கழியில் 108 முறை வலம் வந்து மூலை அனுமாரை வழிப்பட்டால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது மக்களின் ஐதீகம். SHARE IT.

News September 15, 2025

மருத்துவமனையில் ஆய்வு ஆட்சியர் மற்றும் எஸ்பி

image

தஞ்சாவூரில் இராசாமிராசுதார் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து, சிகிச்சை பெறவரும் பொதுமக்களுக்கு வழிகாட்டுதல் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News September 15, 2025

தஞ்சை: கிலோ கணக்கில் போதை பொருட்கள் பறிமுதல்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி திருவிடைமருதூரை சேர்ந்த பக்ரூதீன் (41) என்ற நபரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 கிலோ ஹான்ஸ் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!