News September 15, 2025
திருப்பூர்: 12th போதும் வங்கி வேலை!

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. படிப்பு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க https://nabfins.org/Careers/ இந்த லிங்கை அணுகவும். SHARE பண்ணுங்க!
Similar News
News September 15, 2025
திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணி

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 15.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
News September 15, 2025
திருப்பூர்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் நாளை செப்.16:உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் விபரம் :-குண்டடம் -பழனி ஆண்டவர் பாதயாத்திரை குழுமண்டபம், ஊதியூர்
காங்கயம்-மாரியம்மன் கோவில் மண்டபம், படியூர்.பல்லடம்-
ராஜம்மாள் கந்தசாமி கவுண்டர் திருமண மண்டபம், வேலம்பாளையம். உடுமலை -சிவா மண்டபம்,ஊத்துக்குளி பெரிய நாயகி அம்மன் திருமண மண்டபம், சாமியார்பாளையம், பொங்கலூர்-ஏஜி திருமண மண்டபம், புத்தரச்சல்.
News September 15, 2025
திருப்பூர்: அக்.5ம் தேதி தடகள போட்டி!

திருப்பூர் மூத்தோர் தடகள சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 5-ம் தேதி, கே.செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிகளில், 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம். போட்டியாளர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.200. பதிவு செய்ய கடைசி தேதி செப்டம்பர் 20.