News September 15, 2025

விழுப்புரம்: வங்கியில் வேலை, ரூ. 1 லட்சம் சம்பளம்

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு<<>> கிளிக் செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News September 15, 2025

குட்கா பொருட்கள் கடத்தியவர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தரம்சந்த் ஜங்ஷன் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த திண்டிவனத்தை சேர்ந்த உஷா தேவி மற்றும் பக்தூர் தாஸ் ஆகிய இருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 15கி எடை கொண்ட குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News September 15, 2025

விழுப்புரம் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

image

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவமால் மருதூர் பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பிரவீன் குமார் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 25 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கண்டமங்கலம் போலீசார், பிரவீன் குமாரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News September 15, 2025

அன்பு கரங்கள் திட்டம்: ஆட்சியர் பெருமிதம்

image

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பெற்றோர் இருந்தால் என்ன கிடைக்குமோ அதை அந்தக் குழந்தைகளுக்கு “அன்புக்கரங்கள் திட்டம் ” மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகின்றார். இத்திட்டம் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!