News September 15, 2025

குலசை கோவில் நிலம் ஏலம் அறிவிப்பு

image

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட பாண்டீஸ்வரர் கோவில் மற்றும் எழுவரைமுக்கி சாஸ்தா ஐயப்பன் அய்யனார் கோவில் நிலங்கள் வரும் 18ம் தேதி காலை 11:30 மணிக்கு துறை அலுவலர்கள் மூலம் 5 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே ஏலம் எடுப்பவர்கள் 2000 ரூபாய் முன்வைப்பு தொகை செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.

Similar News

News September 15, 2025

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை மின்தடை

image

தூத்துக்குடி 110/22 KV நகர் துணைமின் நிலையத்தில் நாளை(செப்.16) பராமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் KV நகர் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1, 2ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டையபுரம் ரோடு, தெப்பகுளம் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தபடும்.

News September 15, 2025

தூத்துக்குடி : பட்டாவில் திருத்தமா??

image

தூத்துக்குடி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கபட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு மாவட்ட அதிகாரியை 0461-2340522 அணுகலாம். SHARE பண்ணுங்க!

News September 15, 2025

தூத்துக்குடி: தனியார் பேருந்தில் புகை

image

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே முக்காணி பகுதியில் நேற்று சென்னையில் இருந்து தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த பேருந்து முக்காணி அருகே வந்த போது பேருந்தின் உள்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனைத் தொடர்ந்து அதிலிருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!