News September 15, 2025

திண்டுக்கல்லில் துடிதுடித்து பலி!

image

திண்டுக்கல்: வேடசந்தூர், நால்ரோடு பகுதியில் ஜி. நடுப்பட்டியை சேர்ந்த வீராசாமி மகன் குஞ்சையா(45). பரோட்டா மாஸ்டரான இவர் இன்று(செப்.15) நடுப்பட்டி பகுதியில் சாலையில் கடக்கும் போது வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காவிரி கூட்டுக் குடிநீர் வால்வு மீது விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News September 15, 2025

திண்டுக்கல்: வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய எளிய வழி!

image

திண்டுக்கல் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <>கிளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.(SHARE IT).

News September 15, 2025

திண்டுக்கல்லில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா

image

திண்டுக்கல்: முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள அண்ணா அவர்கள் உருவச் சிலைக்கு திமுக துணை பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் பேரணி சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில், அப்பகுதி திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News September 15, 2025

திண்டுக்கல்: BE பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலை!

image

திண்டுக்கல் பட்டதாரிகளே.., மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள 48 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க! இதை உடனே உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!