News September 15, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருமருகல் வட்டத்தில் உழவர் சேவை மையங்கள் அமைக்க 25 வயதுக்குட்பட்ட வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் அறிவித்துள்ளார். இந்த சேவை மையம் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்களை விற்பனை செய்யலாம். சேவை மையம் அமைக்க அரசு சார்பில் பயிற்சி மற்றும் முதலீட்டில் 30% மானியம் வழங்கப்படும். ஆர்வமுள்ளோர் திருமருகல் வேளாண் உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News September 15, 2025

நாகையில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 235 மனுக்களை பெற்று, அவற்றிற்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். பின்னர் நலத்திட்ட உதவியாக தையல் இயந்திரம் வழங்கினார்.

News September 15, 2025

மக்கள் நீதிமன்றத்தில் 1732 வழக்குகளுக்கு தீர்வு

image

நாகை மாவட்ட நீதிமன்றங்களில் நேற்று முன்தினம் நடைப்பெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் தலைமையில் பல்வேறு வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. இதில், 1732 வழக்குகளுக்கு மொத்தம் ரூபாய் 4 கோடியே 52 லட்சம் மதிப்பில் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 15, 2025

நாகை மக்களே… பட்டா, சிட்டா விபரங்களை அறிய எளிய வழி!

image

நாகை மக்களே…உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து <>eservices<<>>.tn.gov.in என்ற இணையதளத்தில் எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா திருத்தம், புல எல்லை வரைபடம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE மற்றும் LIKE பண்ணுங்க..

error: Content is protected !!