News September 15, 2025
2nd Hand Phone வாங்குறீங்களா? இத செக் பண்ணுங்க

2nd Hand போன் வாங்கும்போது அது திருட்டு போனாக இருக்குமோ என்ற சந்தேகம் வரும். அந்த சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள இந்த ஈஸியான முறையை செய்துபாருங்கள். ▶முதலில் *#06# என டயல் செய்வது IMEI எண்ணை குறித்துக்கொள்ளுங்க ▶Messages-க்கு சென்று KYM என எழுதி IMEI நம்பரை டைப் செய்து அதை 14422 நம்பருக்கு SMS அனுப்புங்கள் ▶உங்கள் ஃபோன் Blacklisted என SMS வந்தால் அது திருட்டு ஃபோன் என அர்த்தம். SHARE.
Similar News
News September 15, 2025
பி.எட்., படிப்பில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

பி.எட்., எம்.எட். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட கலந்தாய்வுக்கு பின் 2 அரசு கல்லூரிகளில் 49 காலியிடங்கள் உள்ளதாகவும், 13 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் www.tngasa.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News September 15, 2025
ஒப்பந்த நர்ஸ்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: SC

ஒப்பந்த நர்ஸ்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று SC தெரிவித்துள்ளது. ஒப்பந்த நர்ஸ்களின் சம்பளம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இந்த நர்ஸ்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுவதாக கடுமையாக சாடியுள்ளது. இலவசங்கள் கொடுக்க பணம் இருக்கும் நிலையில், சம்பளம் கொடுக்க பணமில்லையா என்றும் SC கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக மத்திய அரசு, நர்ஸ் சங்கம் பதிலளிக்க SC உத்தரவிட்டுள்ளது.
News September 15, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

<<17591466>>பஞ்சாப் நேஷனல் வங்கி<<>>, கரூர் வைஸ்யா வங்கிகளை தொடர்ந்து யுகோ பொதுத்துறை வங்கியும் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது. செப்.10 முதல் MLCR வகை கடன் வட்டி விகிதங்களில் 5 அடிப்படை புள்ளிகள் (0.05%) குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது, MLCR வகை கடன்களுக்கான வட்டி விகிதம் 8.90%-ல் இருந்து 8.85% ஆக குறைந்துள்ளதால், வீட்டு, வாகன கடன்களின் EMI தொகை குறைகிறது.