News September 15, 2025

குமரி: அசைவ பிரியர்கள் கவனத்திற்கு!

image

குமரி மாவட்டத்தில் கறிக்கோழி விலை உயர்ந்துள்ளது. கடந்த 2ம் தேதி கிலோ 121 ரூபாய்க்கு கறிக்கோழி விற்பனை செய்யபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 13 நாட்களில் கிலோவிற்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று கறிக்கோழி விலை கிலோ 151 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இது அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோழிகள் முழு எடையை எட்டுவதற்கு முன்பே வெப்பம் காரணமாக இறந்து விடுவதால் விலை உயர்ந்துள்ளது.

Similar News

News September 15, 2025

குமரி: குழந்தையை கொன்ற தாய்

image

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள சம்பக்குளத்தில் கடந்த 11-ம் தேதி பச்சிளம் குழந்தை சடலமாக தலை இல்லாமல் மிதந்து வந்த வழக்கில், பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூர தாயான ஈத்தாமொழி புதூர் பகுதியை சேர்ந்த ரேகா (38) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். வாலிபருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் பிறந்ததால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அம்பலமானது.

News September 15, 2025

குமரியில் ரப்பர் விலை சரிவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 50ஆயிரம் ஏக்கர் பரப்பில் ரப்பர் சாகுபடி செய்யபட்டு வருகிறது. இந்த ஆண்டு கிலோ 200 ரூபாய்க்கு மேல் ரப்பர் விலை உயர்ந்திருந்தது. இந்நிலையில் ரப்பர் விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிலோ 4 ரூபாய் வரை ரப்பர் விலை குறைந்துள்ளது. இது ரப்பர் விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது

News September 15, 2025

குமரி: நீங்க பட்டதாரியா? ரூ.35,000 வேலை ரெடி!

image

குமரி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்து 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் <>இங்க க்ளிக் <<>>செய்து வருகிற 21ம் தேதிக்குள் விண்ணப்பியுங்க. டிகிரி முடித்தவர்களுகு SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!