News April 12, 2024
தனித் திறமைகளே டி20 போட்டிகளில் கரை சேர்க்கும்

டி20 போட்டிகள் பவுலர்களுக்கு கடினமாகவே இருக்கும் என பும்ரா கூறியுள்ளார். யார்கர் மட்டுமே வீசி எதிரணியை வெல்ல முடியாது என்ற அவர், தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வதே டி20 கிரிக்கெட்டில் வெற்றிக்கான முக்கிய வழி என்றார். தொடர்ந்து பேசிய அவர், வெற்றியோ, தோல்வியோ அதை நினைத்து தான் பெரிய அளவில் சந்தோஷம் பட மாட்டேன் எனக் கூறினார். ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
Similar News
News November 8, 2025
பெருங்குடல் புற்றுநோய்; இந்த உணவுகளை தவிருங்கள்

இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் மோசமான உணவு பழக்கத்தால், இளைஞர்களை கூட பெருங்குடல் புற்றுநோய் அதிகமாக பாதிக்கிறது. இதை முன்பே கண்டறியாமல் விட்டால் உயிரையே கொள்ளும். இதனை தடுக்க சில உணவுகளை அடிக்கடி உண்பதை நாம் தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அது என்னென்ன உணவுகள் என்பதை தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. அனைவரும் நலமாக இருக்க SHARE THIS.
News November 8, 2025
BREAKING: ரஜினிகாந்த் அண்ணனுக்கு மாரடைப்பு

நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவரை பெங்களூருவில் இருக்கும் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர். தனது சகோதரர் சீரியஸாக இருப்பதை அறிந்ததும், அவரை சந்திக்க ரஜினி பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார் என கூறப்படுகிறது. சினிமா கரியரில் ரஜினியை வழிநடத்திய முக்கிய நபர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 8, 2025
வாக்காளர் கணக்கெடுப்பில் குழப்பமோ குழப்பம்

SIR பணிகள் ஆரம்ப நிலையிலேயே பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. SIR படிவம் விநியோகம் செய்வதில் குழப்பம் நீடிப்பதாகவும், பல இடங்களில் படிவம் விநியோகம் செய்யும் பணியே துவங்கவில்லை எனவும் வாக்காளர்கள் கூறுகின்றனர். மேலும், போதுமான பயிற்சி இல்லாததால், படிவம் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திணறி வருவதாகவும் புகார் கூறுகின்றனர்.


