News September 15, 2025
வேலூர் மாவட்ட காவல் துறை செய்த மாஸ் சம்பவம்

வேலூர் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ஏ.மயில்வாகனன் முயற்சியால், ரூ.50 லட்சம் மதிப்புடைய 250 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட “செல் ட்ராக்கர்” கூகுள் படிவம் மூலம், இதன் மூலம் இதுவரை 9 கட்டங்களாக ரூ.3.38 கோடி மதிப்பிலான 1,754 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.
Similar News
News September 15, 2025
வேலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செப்.,19ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் வரும் செப்.16, 17 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT
News September 15, 2025
சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறை தீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 17 அன்று பிற்பகல் 3:30 மணிக்கு சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
News September 15, 2025
வேலூர்: பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரர் கைது

வேலூர் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் வீரகுமார் (32), பென்னாத்தூரைச் சேர்ந்த 27 வயதுப் பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி, ரூ.35 லட்சம் பணம் பறித்துள்ளார். வீரகுமார் திருமணம் செய்ய மறுத்ததால், பாதிக்கப்பட்ட பெண் வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், வீரகுமார் மற்றும் அவரது தம்பி கவிகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.