News September 15, 2025
சேலம்: B.E./B.Tech போதும்..ரூ.54,000 சம்பளத்தில் வேலை!

சேலம் மக்களே, The Indian Port Rail & Ropeway Corporation Limited (IPRCL) காலியாக உள்ள 18 Project Site Engineer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.54,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News September 15, 2025
சேலம் மாநகர காவல்துறை எச்சரிக்கை!

சேலம் சிட்டி போலீஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் ஆப்ஸ் மூலம் வரும் APK கோப்புகளை பதிவிறக்க வேண்டாம், என அறிவுறுத்தியுள்ளது. அவை மால்வேர் கொண்டு உங்கள் கைபேசியை பாதித்து தனிப்பட்ட தகவல்களை திருடும் அபாயம் உள்ளது. நம்பகமான மூலங்களில் இருந்து மட்டுமே ஆப்ஸ் பதிவிறக்கவும். புகார் பதிவு செய்ய www.cybercrime.gov.in பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
News September 15, 2025
சேலம்: பயன்பாட்டிற்கு வரும் தாழ்தளப் பேருந்துகள்?

சேலம் கோட்டத்திற்கு முதற்கட்டமாக 16 தாழ்தளப் பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள இப்பேருந்து சேவைகளின் துவக்க விழா அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் எண்-1 பேருந்து சேலம் மாநகரத்தில் பயணிக்க உள்ளது. குறிப்பாக புதிய பேருந்து நிலையம் முதல் அயோத்தியாபட்டணம் வரை இயக்கப்படும், இப்பேருந்து 3 பைபாஸ் வழியாக இயக்கப்படும்.
News September 15, 2025
சேலம்: போதை மாத்திரை – மாணவன் உட்பட 5 பேர் கைது!

எடப்பாடி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுகிறது என எடப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் தகவல் கிடைத்தது. இதையடுத்து தனியார் லாட்ஜில் அந்த கும்பல் இருப்பதாக தகவல் தெரிந்து அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது ராஜசேகர், ஜீவா, சுரேஷ்குமார், சசிகுமார், மற்றும் ஒரு மாணவன் என மொத்தம் 5 பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.