News September 15, 2025
இந்தியர் கொலைக்கு பைடன்தான் காரணம்: டிரம்ப்

USA-ல் இந்தியரான சந்திரமௌலி நாகமல்லையா கொலை செய்யப்பட்டதற்கு ஜோ பைடனின் கையாளாகாத ஆட்சிதான் காரணம் என டிரம்ப் சாடியுள்ளார். பைடன் ஆட்சியில் கியூபாவிலிருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்தான் இக்கொலையை செய்ததாகவும், தன்னுடைய ஆட்சியில் USA மீண்டும் பாதுகாப்பானதாக மாறும் எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், கைதான நபருக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
அருண் விஜய்யை ரத்தம் வரும் அளவுக்கு குத்திய நடிகர் தனுஷ்

இட்லி கடை செட்டில் சண்டைக்காட்சியை படம்பிடிக்கும்போது, தான் அருண் விஜய்யை நிஜமாக குத்திவிட்டதால் அவருக்கு ரத்தம் வந்ததாக நடிகர் தனுஷ் பேசியுள்ளார். அப்போது கடுமையாக காயம் ஏற்பட்டிருந்த போதும் ஐஸ் பேக் வைத்துவிட்டு உடனே அடுத்த ஷாட்டுக்கு அருண் விஜய் நடிக்க வந்துவிட்டதாகவும், அந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் 2 மணி நேரம் ஷூட்டிங் நின்றிருக்கும் எனவும் தனுஷ் கூறினார்.
News September 15, 2025
மாதம் ₹2,000 உதவித்தொகை.. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

‘அன்புக்கரங்கள்’ திட்டம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெற்றோர் இருவரையும் இழந்த (அ) ஒருவரை இழந்து, மற்றொருவரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து, தொடர்ந்து பாதுகாத்திட இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 18 வயது வரை மாதந்தோறும் ₹2,000 வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 6,082 மாணவர்கள் இத்திட்டத்தில் பயன் பெறவுள்ளனர்.
News September 15, 2025
புதிய வஃக்பு வாரிய சட்ட விதிக்கு இடைக்கால தடை

புதிய வக்ஃபு வாரிய சட்டத்தில் சில விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து SC உத்தரவிட்டுள்ளது. வக்ஃபு சொத்துகளில் முறைகேடு எழுந்தால் அரசு அதிகாரி விசாரிக்கலாம் என்ற விதிக்கும், 5 ஆண்டுகள் இஸ்லாமை பின்பற்றினால் மட்டுமே வாரியத்துக்கு சொத்துகளை கொடுக்க முடியும் என்ற விதிக்கும் மட்டுமே இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் இதற்கான விதிகளை வகுக்கும் வரை இத்தடை தொடரும் எனவும் கூறியுள்ளது.