News September 15, 2025

கோவை அருகே ஆண் குழந்தை நரபலியா?

image

கோவை:இருகூர் – ராவத்துார் ரயில் தண்டவாளம் அருகே, நேற்று ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலம் மற்றும் அந்த இடத்தில் மிளகாய் பொடி,கோழி ரத்தம் உள்ளிட்டவை சிதறி கிடந்தது. தகவல் அறிந்த சிங்காநல்லுார் போலீசார் குழந்தை உடலை கைப்பற்றினர். போலீசார் கூறுகையில், ‘குழந்தையை கொலை செய்து, அதை மறைக்க, கோழி ரத்தம், மிளகாய் பொடி உள்ளிட்டவற்றை துாவியிருக்கலாம்.நரபலியாகவும் இருக்கலாம் என விசாரணை நடக்கிறது’ என்றனர்.

Similar News

News September 15, 2025

கோவை: இன்ஜினியர்களுக்கு மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc, B.E., B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> செப்.17-க்குள் விண்ணபிக்கலாம். இத்தகவலை இன்ஜினியர் முடித்துவிட்டு வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

News September 15, 2025

ராணுவ பணிக்கான எழுத்து தேர்வு 1040 பேர் அப்செண்ட்!

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நேற்று ஒருங்கிணைந்த ராணுவ தேர்வுகள் (தொகுதி-II) கோவையில் 4 மையங்களில் நடைபெற்றது. போலீசாரால் தேர்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்எஸ்புரம் மாநகராட்சி மகளிர் பள்ளி, பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி, அவினாசிலிங்கம் கல்லூரி வளாகங்களில் 4 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 2349 பேர் தேர்வு எழுதினர். 1040 பேர் தேர்வு எழுத வரவில்லை.

News September 15, 2025

கோவை: தபால் சேவை இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவு!

image

கோவையில் விரைவு தபால் (எக்ஸ்பிரஸ் மெயில்) சேவை துவங்கி இன்று 38 ஆண்டுகள் நிறைவு செய்கிறது. கோடிக்கணக்கான கடிதங்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும் சென்றடையச் செய்யும் வகையில் மத்திய அரசு 1986 ஆகஸ்ட் 1-ம் தேதி இச்சேவையை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் மும்பை, கோல்கட்டா உட்பட 14 நகரங்கள், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட ஏழு நாடுகளில் மட்டுமே இருந்த இது, தற்போது நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது.

error: Content is protected !!