News September 15, 2025
திண்டுக்கல்லில் பயங்கர விபத்து!

திண்டுக்கல்: மலேசிய வாழ் தமிழர்கள் 10க்கும் மேற்பட்டோர் நேற்று(செப்.14) பழனி தண்டாயுதபாணி மலைக்கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு கொடைக்கானல் நோக்கி சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பேத்துப்பாறை அருகே வெள்ளைப்பாறை பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாடை இழந்த வேன், இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.
Similar News
News September 15, 2025
திண்டுக்கல்லில் பிரபல நகைக் கொள்ளையன் கைது!

திண்டுக்கல்: வேடசந்தூர், சுள்ளெறும்பு, நால் ரோட்டில் வசித்து வரும் பாலமுருகன் என்பவர் வீட்டில் கடந்த 4ஆம் தேதி பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. பாலமுருகன் இது குறித்து வேடசந்தூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளின் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் கதிரியன்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் இன்று(ஸெப்.15) கைது செய்யப்பட்டார்.
News September 15, 2025
திண்டுக்கல்: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது.
▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்.
இதற்கு விண்ணப்பிக்க <
News September 15, 2025
திண்டுக்கல்: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

திண்டுக்கல் பட்டதாரிகளே.., தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க <