News September 15, 2025
தேனி: மருமகளை கொலை செய்த மாமனார்

தேனி பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி ராஜபிரியா தனியார் பள்ளி ஆசிரியை. கணவன் மனைவி இடையே நேற்று முன் தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜபிரியா கோவித்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (செப்.14) மீண்டும் வீடு திரும்பிய அவரை சதீஷின் தந்தை துரைசிங்கம் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர் அவர் பழனிசெட்டிபட்டி போலீசில் சரணடைந்தார். போலீசார் விசாரணை.
Similar News
News September 15, 2025
தேனி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

தேனி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்குடாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News September 15, 2025
தேனி: பைக் விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

போடியை சேர்ந்தவர் ராகுல்குமார் (21). கல்லூரி மாணவரான இவர் நேற்று முன் தினம் பைக்கில் தனது உறவினரை பார்ப்பதற்காக கம்பம் சென்றுள்ளார். கம்பம் பைபாஸ் சாலையில் சென்ற பொழுது சாலையில் இருந்த பேரிகார்டு மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராகுல்குமார் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிகின்றனர்.
News September 15, 2025
ஆண்டிபட்டி: பைக் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் நேற்று (செப்.14) அவரது பைக்கில் வேலைக்கு சென்றுள்ளார். அவருக்குப் பின்னால் யோஸ்வா என்பவர் ஓட்டி வந்த கார் கோவிந்தராஜ் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் கோவிந்தராஜ் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.