News September 15, 2025
தர்மபுரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செப்.,19ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் வரும் செப்.16, 17 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT
Similar News
News September 15, 2025
தருமபுரி: இலவசமா காசிக்கு போக செம்ம வாய்ப்பு!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை தருமபுரி மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது இந்த <
News September 15, 2025
ஒகேனக்கலில் தடை நீக்கம்

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 16,000 கன அடியாகக் குறைந்துள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளுக்கு அருவியில் குளிப்பதற்கும், படகு சவாரி செய்வதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
News September 15, 2025
தருமபுரி: வயது வராத சிறார்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

சமீப காலமாக சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை விட ஆபத்தானது சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்,
✅ வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும்
✅ வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்
✅ 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது
✅ பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை (SHARE)