News September 15, 2025
குமரி மக்களே இதல்லாம் நம்பாதீங்க

குமரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: வீட்டில் இருந்தபடியே 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என செல்போனுக்கு வரும் குறுஞ்செய்தியை நம்பி telegram, whatsapp கணக்கில் லிங்க் கிளிக் செய்து போட்டிகள் நடத்தப்பட்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறை சார்பாக தெரிவிக்கபட்டுள்ளது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர்!
Similar News
News September 15, 2025
குமரியில் ரப்பர் விலை சரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 50ஆயிரம் ஏக்கர் பரப்பில் ரப்பர் சாகுபடி செய்யபட்டு வருகிறது. இந்த ஆண்டு கிலோ 200 ரூபாய்க்கு மேல் ரப்பர் விலை உயர்ந்திருந்தது. இந்நிலையில் ரப்பர் விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிலோ 4 ரூபாய் வரை ரப்பர் விலை குறைந்துள்ளது. இது ரப்பர் விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது
News September 15, 2025
குமரி: நீங்க பட்டதாரியா? ரூ.35,000 வேலை ரெடி!

குமரி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்து 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் <
News September 15, 2025
குமரி: மனைவியை கொலை செய்த கணவர்

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு இலியான் விளையை சேர்ந்த கஸ்தூரி ( வயது 50) என்பவரை அவரது கணவர் ஜஸ்டின் குமார் கழுத்தை அறுத்து நேற்று கொலை செய்தார். பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஜஸ்டின் குமார் வேளாங்கண்ணி செல்வதற்காக நாகர்கோவில் பஸ் நிலையத்தில் நின்ற போது அவரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். சம்பவம்குறித்து போலீசார் விசாரணை.