News September 15, 2025

விருதுநகரில் ஆறு ஆண்டுகளாக அவலம்

image

விருதுநகர் கருமாதி மடம் எம்.ஜி.ஆர்.,சிலை அமைந்துள்ள பகுதியில் நான்கு புறங்களில் இருந்து ரோடுகள் சந்திக்கின்றன. விருதுநகரில் இருந்து கலெக்டர் அலுவலகம், சிவகாசி ரோட்டில் இருந்து அருப்புக்கோட்டை பாலம் ஆகிய ரோடுகளில் தினசரி ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர்.ஆனால் இந்த சிக்னல் 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் செயல்பாட்டிற்கு கொண்டு வராததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

Similar News

News September 15, 2025

விருதுநகரில் 741 பட்டாசு ஆலைகளுக்கு நோட்டீஸ்

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2024 ஜூலை முதல் 2025 ஆகஸ்ட் மாதம் வரை பட்டாசு ஆலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சிறிய அளவில் விதிமீறல் இருந்த 741 ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விதிமுறையை மீறியதாக 85 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் மா.கருப்பசாமி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்த தகவலை பெற்றுள்ளார்.

News September 15, 2025

விருதுநகர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி

image

ராஜபாளையத்தை சேர்ந்த சின்ன குருசாமி மகன் சிவா 25, கட்டட தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவர் டூவீலரில் நேற்று மதியம் 1:30 மணிக்கு ராஜபாளையம் சென்றுவிட்டு எஸ். ராமலிங்கபுரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் புது பஸ் ஸ்டாண்ட் அருகே கோதை நாச்சியார்புரம் விலக்கிற்கு முன் அடையாளம் தெரியாத வாகனம் பின்னால் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

News September 15, 2025

விருதுநகர்: டிகிரி முடித்தால் ரூ.35,000 சம்பளத்தில் வேலை

image

விருதுநகர் மக்களே தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்குஅறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் இங்கே<> க்ளிக் செய்து<<>> வருகிற 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். டிகிரி முடித்த அனைவருக்கும் இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!